/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ இரு விபத்துகளில் 4 பேர் சாவு திருவண்ணாமலையில் பரிதாபம் இரு விபத்துகளில் 4 பேர் சாவு திருவண்ணாமலையில் பரிதாபம்
இரு விபத்துகளில் 4 பேர் சாவு திருவண்ணாமலையில் பரிதாபம்
இரு விபத்துகளில் 4 பேர் சாவு திருவண்ணாமலையில் பரிதாபம்
இரு விபத்துகளில் 4 பேர் சாவு திருவண்ணாமலையில் பரிதாபம்
ADDED : ஜூன் 23, 2024 09:48 AM
திருவண்ணாமலை : ஆந்திர மாநிலம், திருப்பதியிலிருந்து 'டாடா சுமோ' காரில் வந்த 11 பேர், திருவண்ணாமலையில், கிரிவலம் சென்று விட்டு மீண்டும் நேற்று அதிகாலை, 5:45 மணியளவில் ஊர் திரும்பினர். அப்போது, குருவிமலை அருகே, வேலுாரிலிருந்து வந்த அரசு பஸ் மோதியதில், டாடா சுமோ சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
காரில் பயணம் செய்த பிரவிளிகா, 34, ஜெகன்மோகன், 17, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; ஒன்பது பேர் படுகாயமடைந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கலசப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், திருவண்ணாமலை அடுத்த செ.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 36. இவரது உறவினர் விஜயகாந்த், 32. இருவரும், 'ஹோண்டா' பைக்கில், செ.அகரம் கிராமத்திலிருந்து, கீழ்நாத்துார் நோக்கி சென்றனர்.
அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்த குடும்பத்தினர் 'இன்னோவா' காரில் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நல்லவன்பாளையம் பைபாஸ் சாலை அருகே வந்த கார் பைக் மீது மோதியதில் முருகன், விஜயகாந்த் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.