/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ ரூ.50.59 லட்சம் மோசடி கூட்டுறவு செயலருக்கு சிறை ரூ.50.59 லட்சம் மோசடி கூட்டுறவு செயலருக்கு சிறை
ரூ.50.59 லட்சம் மோசடி கூட்டுறவு செயலருக்கு சிறை
ரூ.50.59 லட்சம் மோசடி கூட்டுறவு செயலருக்கு சிறை
ரூ.50.59 லட்சம் மோசடி கூட்டுறவு செயலருக்கு சிறை
ADDED : ஜூன் 14, 2024 02:43 AM
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொடக்க வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்க செயலராக கடந்த, 2014ல் பணிபுரிந்தவர் கமலநாதன், 62. இவர், நெல் கொள்முதல் செய்து அரிசியாக்கி விற்பனை செய்தல், கோணிப்பை ஏலம் விடுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
அதன்படி, கூட்டுறவு சங்கங்களில் துணைப்பதிவாளர் சரவணன் தலைமையிலான குழுவினர், 2013 - 2014ல் சங்க வரவு, செலவு கணக்கை, கடந்த, 2014ம் ஆண்டு தணிக்கை செய்தனர். அதில், போலி ஆவணங்கள் தயாரித்து, 50.59 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இது குறித்து, துணைப்பதிவாளர் சரவணன், திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார், சங்க முன்னாள் செயலர் கமலநாதனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த பூர்ணிமா, நேற்று முன்தினம் மாலை, கமலநாதனுக்கு, 4 ஆண்டு சிறை, 40,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.