/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ ஓட்டு போடாத ஊர் மக்களுக்கு குடிநீர் கட்: எதிர்த்து போராட்டம் ஓட்டு போடாத ஊர் மக்களுக்கு குடிநீர் கட்: எதிர்த்து போராட்டம்
ஓட்டு போடாத ஊர் மக்களுக்கு குடிநீர் கட்: எதிர்த்து போராட்டம்
ஓட்டு போடாத ஊர் மக்களுக்கு குடிநீர் கட்: எதிர்த்து போராட்டம்
ஓட்டு போடாத ஊர் மக்களுக்கு குடிநீர் கட்: எதிர்த்து போராட்டம்
ADDED : ஜூன் 14, 2024 02:42 AM

திருவண்ணாமலை,:திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலானந்தல் பஞ்., பாரதிபுரம் கிராமத்தில், கடந்த சில மாதங்களாக குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டது. தெரு மின் விளக்குகள் எரியாததாலும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பஞ்., தலைவர் மாணிக்கவேலிடம் முறையிட்டு, இதை சரிசெய்து தரக் கேட்டனர்.
அதற்கு அவர், 'எனக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை, எனவே, குடிநீர் சப்ளை தர முடியாது. மின்விளக்கு பழுது பார்க்க முடியாது' என கூறிவிட்டார்.
இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள், நேற்று திருவண்ணாமலை - அவலுார்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மங்கலம் போலீசார் சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, மறியலை கைவிடச் செய்தனர்.