Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ திருவண்ணாமலை தீப திருவிழாவில் 40 லட்சம் பேர் பங்கேற்பு

திருவண்ணாமலை தீப திருவிழாவில் 40 லட்சம் பேர் பங்கேற்பு

திருவண்ணாமலை தீப திருவிழாவில் 40 லட்சம் பேர் பங்கேற்பு

திருவண்ணாமலை தீப திருவிழாவில் 40 லட்சம் பேர் பங்கேற்பு

ADDED : ஜூன் 30, 2024 01:00 AM


Google News
சென்னை:''திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், 40 லட்சம் பேர் திரண்டனர்,''என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில், அவர் பேசியதாவது:

சட்டம் - ஒழுங்கை காப்பதில், தமிழக அரசு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து விழாக்களையும், அமைதியான முறையில் நடத்திக்காட்டி உள்ளோம்.

கடந்த, 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த, சிவகங்கை கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை, எந்த பிரச்னையும் இல்லாமல், சுமுகமாக நடத்திக்காட்டி உள்ளோம்.

அதேபோல், 40 லட்சம் பேர் திரண்ட, திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா; 2 லட்சம் பேர் பங்கெடுத்த மதுரை சித்திரை திருவிழா; 8 லட்சம் பேர் கூடிய திருச்செந்துார் சூரசம்ஹார விழா; 5 லட்சம் பேர் கூடிய பழனி தைப்பூச திருவிழா; 12 லட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா விழா; 3 லட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலய கொடியேற்ற விழா; 20,000 பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு விழா என, மக்கள் அதிகம் கூடும் விழாக்களை, அமைதியாக நடத்திக்காட்டி இருக்கிறோம்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us