/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மீண்டும் தொழிலில் ஒரு பின்னடைவு; ஒருங்கிணைந்தால் பெறலாம் உயர்வு மீண்டும் தொழிலில் ஒரு பின்னடைவு; ஒருங்கிணைந்தால் பெறலாம் உயர்வு
மீண்டும் தொழிலில் ஒரு பின்னடைவு; ஒருங்கிணைந்தால் பெறலாம் உயர்வு
மீண்டும் தொழிலில் ஒரு பின்னடைவு; ஒருங்கிணைந்தால் பெறலாம் உயர்வு
மீண்டும் தொழிலில் ஒரு பின்னடைவு; ஒருங்கிணைந்தால் பெறலாம் உயர்வு

மீண்டும் எழுந்த சிக்கல்
விசைத்தறியாளருடன் கலந்து பேசி, சுமூக தீர்வு காணப்பட்டு, கடந்த ஒரு மாதமாக, வழக்கம்போல் உற்பத்தி நடந்து வருகிறது. இச்சூழலில், சில ஓபன் எண்ட் (ஓ.இ.,) ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள், நுால் உற்பத்தி நிறுத்தம் மற்றும் ஏற்கனவே பெறப்பட்ட நுால் ஆர்டர்களை வழங்காமல் திடீரென நிறுத்தியதால், ஜவுளி உற்பத்தி சார்ந்த விசைத்தறி தொழிலுக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
தொழிலுக்கு பின்னடைவு
தொடர் போராட்டங்களால், ஆர்டர்களை ஒருபுறம் இழக்க, தொழிலாளர்களும், வேறு தொழிலுக்கு சென்று விடுகின்றனர். இதனால், பல கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் செய்து வரும் எங்களைப் போன்றவர்கள், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம்.
ஒருங்கிணைப்பு அவசியம்
ஓ.இ., மில் உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழில்துறையினரை ஒருங்கிணைத்து, 'கூட்டு கமிட்டி' அமைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.