/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போலீஸ் ஸ்டேஷனில் மாணவியர் களப்பயணம் போலீஸ் ஸ்டேஷனில் மாணவியர் களப்பயணம்
போலீஸ் ஸ்டேஷனில் மாணவியர் களப்பயணம்
போலீஸ் ஸ்டேஷனில் மாணவியர் களப்பயணம்
போலீஸ் ஸ்டேஷனில் மாணவியர் களப்பயணம்
ADDED : ஜூன் 29, 2025 12:30 AM

அவிநாசி : அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவியர், நேற்று அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் களப்பயணம் மேற்கொண்டு, போலீசாரின் சட்ட - ஒழுங்கு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு போலீசார் செய்கின்ற சேவைகள் குறித்து விளக்கப்பட்டது. 110 மாணவியர், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், எஸ்.ஐ.,கள் வேலுசாமி, அமல் ஆரோக்கியதாஸ், கோவிந்தம்மாள், பழநியம்மாள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.