ADDED : பிப் 06, 2024 01:52 AM

அவிநாசி;அவிநாசி கோவிலில் நடிகர் யோகிபாபு, நேற்று தனது குடும்பத்தினருடன் வழிபட்டார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், கடந்த 2ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று நடிகர் யோகிபாபு நேற்று தனது குடும்பத்தினருடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தல வரலாறு குறித்து, சிவாச்சார்யார்களிடம் கேட்டறிந்தார்.
யோகிபாபு கூறுகையில், ''சூட்டிங் இருந்ததால், கும்பாபிேஷகத்தில் பங்கேற்க முடியவில்லை. மண்டல பூஜை நடைபெற்று வருவதை அறிந்தேன்.
எனது ஐந்தாவது திருமண நாளையொட்டி, குடும்பத்தினருடன், அவிநாசியப்பரை தரிசனம் செய்தேன். அவிநாசி கோவிலை பற்றி ஏற்கனவே, நடிகர் சுந்தர்.சி. கூறியுள்ளார். பலமுறை இக்கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன். இன்று தான் அந்த பாக்கியம் நிறைவேறியுள்ளது'' என்றார்.
தரிசனம் முடித்து கோவில் வளாகத்தில், ரசிகர்களுடன் யோகிபாபு 'செல்பி' எடுத்து மகிழ்ந்தார்.