ADDED : ஜூன் 12, 2025 11:17 PM

பல்லடம்; பல்லடம் நகராட்சி, அண்ணா நகர், மகாவிஷ்ணு நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் 45; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமதி 40. நேற்று முன்தினம், கடைக்குச் சென்ற சுமதியை, நாய் ஒன்று கடித்து குதறியது. பொதுமக்கள், நாயை விரட்டி விட்டு சுமதியை காப்பாற்றினர். நாய் கடித்ததில், சுமதியின் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டன.
பொதுமக்கள் கூறுகையில், 'மகாவிஷ்ணு நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வளர்ப்பு நாயை, உரிமையாளர்கள் கட்டி வைக்காமல் வளர்த்து வருகின்றனர். வெளியே சுற்றித் திரியும் வளர்ப்பு நாய், அடிக்கடி வாகன ஓட்டிகளை துரத்துவதும், மக்களை விரட்டுவதுமான சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. நாயை வெளியே அவிழ்த்து விட்டவர் மீது நடவடிக்கை தேவை'' என்றனர்.