/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஏனுங்க இதுக்கு பேரா 'பேட்ஜ் ஒர்க்!' நெடுஞ்சாலை நிலை படுமோசம்ஏனுங்க இதுக்கு பேரா 'பேட்ஜ் ஒர்க்!' நெடுஞ்சாலை நிலை படுமோசம்
ஏனுங்க இதுக்கு பேரா 'பேட்ஜ் ஒர்க்!' நெடுஞ்சாலை நிலை படுமோசம்
ஏனுங்க இதுக்கு பேரா 'பேட்ஜ் ஒர்க்!' நெடுஞ்சாலை நிலை படுமோசம்
ஏனுங்க இதுக்கு பேரா 'பேட்ஜ் ஒர்க்!' நெடுஞ்சாலை நிலை படுமோசம்
ADDED : ஜன 31, 2024 12:10 AM

உடுமலை:தேசிய நெடுஞ்சாலையில், முறையாக 'பேட்ஜ் ஒர்க்', செய்யப்படாததால், ஜல்லிக்கற்கள் ரோடு முழுவதும் பரவி, வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
உடுமலை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், பருவமழைக்குப்பிறகு பல இடங்களில், மெகா பள்ளங்கள் ஏற்பட்டது.
கொழுமம் ரோடு சந்திப்பு முதல் கொல்லம்பட்டறை வரை வாகனங்கள் தடுமாறியபடி பயணிக்கும் நிலை இருந்தது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில், ஜன., 26ல், செய்தி வெளியானது.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் 'பேட்ஜ் ஒர்க்' பணிகள் மேற்கொள்ளப்பட்டது.ஆனால், அப்பணிகளும் தரமில்லாமல், பெயரளவுக்கு செய்துள்ளனர்.
சிறிய ஜல்லிக்கற்களை குழியில் நிரப்பி, தார்க்கலவையை முறையாக மேற்பரப்பில் இடவில்லை. இதனால், ஜல்லிக்கற்கள் பிரிந்து, ரோடு முழுவதும் பரவிக்கிடக்கிறது.
இத்தகைய கற்கள், இரு சக்கர வாகன ஓட்டுநர்களை நிலைதடுமாற வைத்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்தில், மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது. கனரக வாகனங்கள் உள்ளிட்ட அதிக வாகனங்கள் செல்லும் போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில், தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட 'பேட்ஜ் ஓர்க்' விபத்தை ஏற்படுத்தும் பகுதியாக மாற்றியள்ளது அனைத்து தரப்பினரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை நெருக்கடியான பகுதியில் பயணிக்கவே முடியாத நிலை உள்ளது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பள்ளங்களில், செடி நட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.