Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோழிகளை தாக்கும் வெள்ளை கழிச்சல்! தடுப்பூசி செலுத்த அறிவுரை

கோழிகளை தாக்கும் வெள்ளை கழிச்சல்! தடுப்பூசி செலுத்த அறிவுரை

கோழிகளை தாக்கும் வெள்ளை கழிச்சல்! தடுப்பூசி செலுத்த அறிவுரை

கோழிகளை தாக்கும் வெள்ளை கழிச்சல்! தடுப்பூசி செலுத்த அறிவுரை

ADDED : ஜூன் 10, 2025 09:36 PM


Google News
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதிகளில், புறக்கடை முறையிலும், பண்ணை அமைத்தும், நாட்டுக்கோழி உட்பட கோழி ரகங்களை விவசாயிகள் வளர்க்கின்றனர். குறிப்பிட்ட சீசன்களில் கோழிகளை தாக்கும் நோய்களால், பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, வெள்ளை கழிச்சல் நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவவியல் துறை உதவி பேராசிரியர் இன்பராஜ் கூறியதாவது: வெள்ளை கழிச்சல் அல்லது 'ராணிக்கெட்' என்பது பறவைகளை பாதிக்கும் ஒரு நச்சுயிரி நோயாகும். பாதிக்கப்படும் கோழிகள் எந்த நோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் இறந்துவிடும்.

நோய் வாய்ப்பட்ட கோழிகளிலிருந்து, மற்ற கோழிகளுக்குப் பரவும். இளம் கோழிகளில் திடீரென சுவாசநோய் அறிகுறிகள், கண் பகுதியில் சுரப்பு நீர் வெளியேறும். பருவமடைந்த கோழிகளில், திடீரென பசியின்மை, அதிக தளர்ச்சி காணப்படும். முட்டை இடுவது நின்று விடும்.

மூலிகை மருத்துவம்


சீரகம் - 10 கிராம், மிளகு - 5 கிராம், மஞ்சள் பொடி- 5 கிராம், சின்ன வெங்காயம் - 5 எண்ணிக்கை, பூண்டு - 5 பல், கீழாநெல்லி - 50 ஆகியவற்றை இடித்து அரைத்து, அதை சிறுசிறு உருண்டைகளாக மாற்ற வேண்டும்.

இக்கலவையை, தீவனம் அல்லது அரிசியில் கலந்து, 10 கோழிகளுக்கு கொடுக்கலாம். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு, சிறுசிறு உருண்டைகளாக வாய்வழியாக உட்செலுத்த வேண்டும்.

தடுப்பு முறைகள்


கண்சொட்டு முறையில் எப்., 1 தடுப்பூசியும், 28வது நாள் - ஆர்.டி.வி., லசோடா, 40வது வாரம் -ஆர்.டி.வி., செலுத்த வேண்டும். தற்பொழுது வாய்வழியாகவும் வெப்பம் தாங்கக்கூடிய ராணிக்கெட் தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. இதை தீவனத்தில் கலந்து கோழிகளுக்கு கொடுக்கலாம்.

வேகமாக பரவும் தன்மை உடையதால், சுவாச நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us