/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புதிய ரயில்வே கால அட்டவணை எப்போது? புதிய ரயில்வே கால அட்டவணை எப்போது?
புதிய ரயில்வே கால அட்டவணை எப்போது?
புதிய ரயில்வே கால அட்டவணை எப்போது?
புதிய ரயில்வே கால அட்டவணை எப்போது?
ADDED : ஜூன் 01, 2025 07:13 AM
ஒவ்வொரு நிதியாண்டு ஏப்., துவங்கிய பின், புதிய ரயில்வே கால அட்டவணைக்கான பணி துவங்கும். அந்தாண்டு பட்ஜெட்டில் புதியதாக அறிவிக்கப்பட்ட, நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் இயக்கம் அட்டவணையில் சேர்க்கப்படும். ரயில்கள் நிறுத்தியிருந்தால், நின்று செல்லும் இடம் தவிர்க்கப்பட்டிருந்தால், அட்டவணையில் இருந்து எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரயில்கள் விபரம் அகற்றப்படும்.
ரயில் குறித்த கால அட்டவணையில் சூப்பர்பாஸ்ட் ரயில்கள் சிவப்பு நிறத்திலும், எக்ஸ்பிரஸ் மஞ்சள், பாசஞ்சர் பச்சை நிறத்திலும் அடிக்கோடிட்டு காட்டப்படும். கடந்த பிப்.,1ல் பொது பட்ஜெட் வெளியானது; ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த பொது பட்ஜெட் என்பதால், பல அறிவிப்புகளும் வெளியாகின.
அதேநேரம், ஏப்., மாத இறுதி வரை ரயில்வே கால அட்டவணை மாற்றம் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், ' நாடு முழுதும் ரயில்களுக்கான கால அட்டவணையில் 2025 டிச., வரை மாற்றமில்லை. சில நிர்வாக காரணங்களுக்காக இம்முடிவு எடுக்கப்படுகிறது.
புதிய ரயில்கள் அறிவிக்கும் போதே, அவை இயக்கத்துக்கு வந்து விடுகிறது; அடுத்த ஆண்டு கால அட்டவணை வரை காத்திருக்காமல், அப்போதுள்ள அட்டவணையிலேயே புதிய ரயில்கள் விபரம் சேர்க்கப்பட்டு விடுகிறது,' என, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இன்று ஜூன், 1ம் தேதி என்ற நிலையில், 2025 - 2026 ம் ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணை வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரயில்வேயின் வாரியத்தின் அறிவிப்பால், தற்போது, ரயில்வே ஸ்டேஷன்களில் வைக்கப்பட்டுள்ள கால அட்டவணை 2025 டிச., 31 வரை அப்படியே அமலில் இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.