/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தலைக்காவிரியில் இருந்து தீர்த்தம் பெருந்தொழுவு பக்தர்கள் பரவசம் தலைக்காவிரியில் இருந்து தீர்த்தம் பெருந்தொழுவு பக்தர்கள் பரவசம்
தலைக்காவிரியில் இருந்து தீர்த்தம் பெருந்தொழுவு பக்தர்கள் பரவசம்
தலைக்காவிரியில் இருந்து தீர்த்தம் பெருந்தொழுவு பக்தர்கள் பரவசம்
தலைக்காவிரியில் இருந்து தீர்த்தம் பெருந்தொழுவு பக்தர்கள் பரவசம்
ADDED : ஜூன் 01, 2025 07:13 AM

திருப்பூர்,: முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிேஷகத்துக்காக, பெருந்தொழுவு மக்கள், தலைக்காவிரி சென்று புனித நீர் எடுத்துவந்தனர்.
மேல்மலையனுார் அங்காளம்மன், புற்றுருவம் கொண்டவளாய், முத்தணம்பாளையத்தில் அருள்பாலித்து வருகிறாள்.
அம்மனுக்கு, ஒவ்வொரு ஆண்டும், சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதற்காக, பூசாரிகள், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் சென்று, தீர்த்தம் எடுத்து வருவது வழக்கம்.
கும்பாபிேஷக விழா இன்று துவங்கும் நிலையில், பூசாரிமார்கள், நேற்று மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் சென்று, புனித தீர்த்தம் எடுத்து வந்தனர்.
அதுமட்டுமல்ல, அம்மனுக்கு, பல்வேறு புண்ணியதலங்களில் இருந்தும் தீர்த்தம் எடுத்துவரப்பட்டது.
அதன்படி, பெருந்தொழுவு கிராம மக்கள், தலைக்காவிரிக்கு சென்று, விரதமிருந்து குடகுமலை சென்று, காவிரித்தாயை வழிபட்டு புனித தீர்த்தம் எடுத்துவந்துள்ளனர்.
தலைக்காவிரியிலிருந்து பக்தர்கள், எடுத்து வந்த புனித தீர்த்தம், கும்பாபிேஷக விழா பூஜைகளுக்கு பயன்படுத்தப்படுமென, விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.