Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'மும்முனை மின்சாரம் என்னாச்சு?'

'மும்முனை மின்சாரம் என்னாச்சு?'

'மும்முனை மின்சாரம் என்னாச்சு?'

'மும்முனை மின்சாரம் என்னாச்சு?'

ADDED : ஜூன் 02, 2025 06:19 AM


Google News
பொங்கலுார் : இ.கம்யூ., கட்சி பொங்கலூர் ஒன்றிய, 21வது மாநாடு கொடுவாயில் நடந்தது. ஒன்றிய செயலாளராக தங்கவேல், துணை செயலாளராக தெய்வசிகாமணி, பொருளாளராக ஜோதிபாசு தேர்வு செய்யப்பட்டனர்.

வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்; மின்தடையை சரி செய்ய வேண்டும்; இருமுனை மின்சாரத்தை மும்முனை மின்சாரமாக மாற்றுவோம் என்று தமிழக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

ஆனைமலை ஆறு நல்லாறு திட்டம் நிறைவேற்ற வேண்டும்; கொடுவாய், பொங்கலூர் ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும்; அத்திக்கடவு குடிநீர் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழு உறுப்பினர் எம்.ரவி, மாவட்ட செயலாளர் இசாக், துணைச் செயலாளர் ஜி.ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us