ADDED : ஜூன் 02, 2025 06:19 AM

திருப்பூர் : நியூ செஞ்சுரி புத்தக நிறுவன பவள விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சி, திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலுள்ள நியூ செஞ்சுரி புத்தக விற்பனை நிலையத்தில் நேற்று நடந்தது.
தமிழ் கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் கோவை மண்டல மேலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். பல்வேறு நுால்கள் வெளியிடப்பட்டன. மக்களிசை பாடல்கள் இசைக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்ட நிர்வாகி குணசேகர் நன்றி கூறினார்.