Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிராமங்களில் என்ன சிக்கல்?

கிராமங்களில் என்ன சிக்கல்?

கிராமங்களில் என்ன சிக்கல்?

கிராமங்களில் என்ன சிக்கல்?

ADDED : ஜூன் 05, 2025 01:36 AM


Google News
திருப்பூர் மாவட்டத்தில், கிராமங்களை பொறுத்தவரை, திடக்கழிவு மேலாண்மை என்பதும், குப்பையில்லா நிலையை உருவாக்குவது; அதன் வாயிலாக, சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பதும் தான், சவால் நிறைந்த பணியாக மாறியிருக்கிறது.

கிராம ஊராட்சிகளில், குப்பை கொட்டுவதற்கான இடமில்லை என்பது தான், இந்த சவாலுக்கான முழு முதற்காரணம்.

அருகருகே உள்ள நான்கைந்து ஊராட்சிகளை இணைத்து, காலியிடம் ஏற்பாடு செய்து, அந்த ஊராட்சிகளின் குப்பைகளை அங்கு கொட்டி, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கவும், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது; மக்காத குப்பையை மறு சுழற்சிக்கு அனுப்புவது உட்பட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். வீடுகளில் இருந்தே குப்பையை தரம் பிரித்து வாங்கும் வகையில், தேவைக்கேற்ப துாய்மைப் பணியாளர்கள் மற்றும் வாகன வசதியை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, கிராம ஊராட்சி தலைவர்கள், தங்களின் பதவிக்காலம் முழுக்க வலியுறுத்துகின்றனர்.

--ரவிக்குமார், அவிநாசி ஒன்றிய முன்னாள் தலைவர், கிராம ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு.

கிராம ஊராட்சிகளில், குப்பைக் கொட்டுவதற்கான இடமில்லை என்பது தான், இந்த சவாலுக்கான முழு முதற்காரணம்.

அருகருகே உள்ள நான்கைந்து ஊராட்சிகளை இணைத்து, காலியிடம் ஏற்பாடு செய்து, அந்த ஊராட்சிகளின் குப்பைகளை அங்கு கொட்டி, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கவும், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது; மக்காத குப்பையை மறு சுழற்சிக்கு அனுப்புவது உட்பட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். வீடுகளில் இருந்தே குப்பையை தரம் பிரித்து வாங்கும் வகையில், தேவைக்கேற்ப துாய்மைப் பணியாளர்கள் மற்றும் வாகன வசதியை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, கிராம ஊராட்சி தலைவர்கள், தங்களின் பதவிக்காலம் முழுக்க வலியுறுத்தி வந்தனர்.ரவிக்குமார், அவிநாசி ஒன்றிய முன்னாள் தலைவர், கிராம ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us