/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காரணப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் காரணப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
காரணப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
காரணப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
காரணப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED : ஜூன் 22, 2025 12:51 AM

பல்லடம் : பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில், காரணப்பெருமாள் கோவில் உள்ளது.
கோவில் கும்பாபிேஷக முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. முன்னதாக, ஆண்டு விழாவை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கணபதி யாக பூஜை வழிபாடுகள் துவங்கின. 7:00 மணிக்கு காரணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. 7:30 மணிக்கு, திருக்கல்யாண வைபவம் துவங்கியது.
பூ, பழம், வேட்டி, சேலை, வளையல், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சீர்வரிசைகள் பக்தர்களால் எடுத்துவரப்பட்டு, திருக்கல்யாணம் பூஜைகள் துவங்கியது. சிறப்பு யாக பூஜைகளை தொடர்ந்து, காரணப்பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
அதன் பின் மணக்கோலத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக காரணப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும், விழா குழு சார்பில், கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.