/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'வேர்கள்' அமைப்புக்கு 'நீர்நிலை பாதுகாவலர்' விருது 'வேர்கள்' அமைப்புக்கு 'நீர்நிலை பாதுகாவலர்' விருது
'வேர்கள்' அமைப்புக்கு 'நீர்நிலை பாதுகாவலர்' விருது
'வேர்கள்' அமைப்புக்கு 'நீர்நிலை பாதுகாவலர்' விருது
'வேர்கள்' அமைப்புக்கு 'நீர்நிலை பாதுகாவலர்' விருது
ADDED : ஜூன் 07, 2025 12:50 AM

திருப்பூர்; மண்ணரை மூளிக்குளத்தை பராமரித்து வரும், 'வேர்கள்' அமைப்புக்கு, தமிழக அரசு, 'சிறந்த நீர்நிலைப் பாதுகாவலர்' விருதுடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் நடந்த, உலக சுற்றுச்சூழல் தினவிழாவில், திருப்பூரை சேர்ந்த 'வேர்கள்' அமைப்புக்கு, 'சிறந்த நீர்நிலைப் பாதுகாவலர்' என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் சுப்ரியாசாகு, விருதையும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலையையும் வழங்கினார். 'வேர்கள்' அமைப்பின் சார்பில், ஒருங்கிணைப்பாளர்கள்சந்தீப், சதீஷ்குமார் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர்.
மூளிக்குளம் பராமரிப்பு
மண்ணரை மூளிக்குளத்தை, வேர்கள் அமைப்பினர், நீண்ட நாட்களாக பராமரித்து வருகின்றனர். குளம் மற்றும் அணைக்கு தண்ணீரை எடுத்து வரும் ராஜ வாய்க்காலையும் பராமரித்து வருகின்றனர். அதனை பாராட்டியே, விருது வழங்கி, தமிழக அரசு கவுரவித்துள்ளது.
வேர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
திருப்பூரில், 'வெற்றி' அறக்கட்டளை, அனைத்து பசுமை அமைப்புகளுக்கும் தாய் அமைப்பாக இருந்து வழிகாட்டி வருகிறது. அதன்படியே, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கிறோம். வெற்றி அமைப்பு, ஆண்டிபாளையம் குளத்தை பராமரிப்பது போல், நாம் சிறிய மூளிக்குளத்தை பராமரிக்கலாம் என, இளைஞர்கள் இணைந்து வேர்கள் அமைப்பை துவக்கினோம்.
மாவட்ட நிர்வாகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தொழில் அமைப்பினர் பங்களிப்புடன், குளம் மற்றும் வாய்க்காலை பராமரித்து வருகிறோம்.
எங்கள் தொடர் முயற்சியால், கழிவுநீர் குளத்தில் கலப்பதை தடுக்க, 2.90 கோடி ரூபாயில், உள்ளூர் திட்டக்குழும நிதியில், கால்வாய் பணி நடக்கப்போகிறது; ஆகாயத்தாமரை படராமல், குளம் துாய்மையாக பராமரிக்கப்படும்.
எதிர்கால சந்ததிக்கான சொத்து
இளைஞர்கள் முயற்சி எடுத்து, நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும்; அது, நமது எதிர்கால சந்ததியினருக்கான சொத்து; பாதுகாப்பாக பராமரித்து அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற இலக்குடன், குளம் பராமரிப்பு பணியை செய்து வருகிறோம்.
- ஒருங்கிணைப்பாளர்கள், 'வேர்கள்' அமைப்பு.