/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முருங்கப்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம் பக்தர்கள் குவிந்தனர் முருங்கப்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம் பக்தர்கள் குவிந்தனர்
முருங்கப்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம் பக்தர்கள் குவிந்தனர்
முருங்கப்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம் பக்தர்கள் குவிந்தனர்
முருங்கப்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம் கோலாகலம் பக்தர்கள் குவிந்தனர்
ADDED : ஜூன் 07, 2025 12:51 AM

திருப்பூர்; திருப்பூர், குமார் நகர், முருங்கப்பாளையம் இந்திரா நகர் ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன் கோவில், மஹா கும்பாபிேஷகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
கும்பாபிேஷக விழா, கடந்த, 2ம் தேதி மங்கள இசை, விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. குமார் நகர் கருப்பராயன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம், மேளதாளத்துடன் நடந்தது.
தொடர்ந்து, யாகசாலை வேள்வி பூஜைகள், சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் ஒலிக்க, கோலாகலமாக நடந்தது. கொடுவாய் அழகு மயில் கும்மியாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, நான்காம் கால வேள்வி பூஜைகள் முடிந்து, கும்பாபிேஷகம் நடந்தது. காலை, 7:45 மணிக்கு, யாகசாலையில் இருந்து, கலசங்கள் புறப்பாடானது. மங்கள இசை, வேதபாராயணத்துடன், காலை, 8:00 முதல், 8:30 மணி வரை, மஹா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடந்தது.
பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் அர்ச்சகர் உத்தமலிங்கேஸ்வர சிவம் குழுவினர், யாகசாலை பூஜைகளை மேற்கொண்டனர்.
கும்பாபிேஷக விழாவை தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிேஷக பூஜைகள் நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.