Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு :கண்காணிப்பு தீவிரம்

 அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு :கண்காணிப்பு தீவிரம்

 அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு :கண்காணிப்பு தீவிரம்

 அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு :கண்காணிப்பு தீவிரம்

ADDED : டிச 01, 2025 05:05 AM


Google News
Latest Tamil News
உடுமலை: திருமூர்த்தி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்காக, தொகுப்பு அணைகளில் இருந்து தண்ணீர் பெற்று இருப்பு செய்வது வழக்கம்.

நான்காம் மண்டல பாசனத்துக்கு, அணையிலிருந்து பிரதான கால்வாய் வழியாக தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி, திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 60 அடியில், 54.48 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 913 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 995 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தொகுப்பு அணைகள் மற்றும் திருமூர்த்தி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், பெய்து வரும் மழை காரணமாக, பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வால்பாறை வால்பாறையில், கடந்த மாதம் முதல் வடகிழக்குப்பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. காலை, மாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

குறிப்பாக வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் படரும் பனிமூட்டத்தால், வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டு வாகனங்களை இயக்குகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக பரவலாக பெய்து வரும் மழையினால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 137.92 அடியாக காணப்பட்டது.

மேல்நீராறில், 19 மி.மீ, நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):

சோலையாறு - 5, பரம்பிக்குளம் - 3, ஆழியாறு - 6, வால்பாறை - 4, மேல்நீராறு - 19, கீழ்நீராறு - 7, காடம்பாறை - 10, மேல் ஆழியாறு - 7 , சர்க்கார்பதி - 3, துணக்கடவு - 2, பெருவாரிப்பள்ளம் - 5, நவமலை -4, பொள்ளாச்சி -15.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us