/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூலி உயர்வு அமலாகவில்லை; மீண்டும் போராடும் சூழல்? விசைத்தறியாளர் குமுறல் கூலி உயர்வு அமலாகவில்லை; மீண்டும் போராடும் சூழல்? விசைத்தறியாளர் குமுறல்
கூலி உயர்வு அமலாகவில்லை; மீண்டும் போராடும் சூழல்? விசைத்தறியாளர் குமுறல்
கூலி உயர்வு அமலாகவில்லை; மீண்டும் போராடும் சூழல்? விசைத்தறியாளர் குமுறல்
கூலி உயர்வு அமலாகவில்லை; மீண்டும் போராடும் சூழல்? விசைத்தறியாளர் குமுறல்
ADDED : மே 31, 2025 05:28 AM

அவிநாசி; கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம், தெக்கலுார் கொங்கு வேளாளர் கலையரங்கில் நடைபெற்றது.
கூட்டமைப்பினர் தெக்கலுார் கிளை தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். கிளை தலைவர்கள் பூபதி (சோமனுார்), முத்துசாமி (அவிநாசி), பாரதி வேலுசாமி (கண்ணம்பாளையம்), ராமசாமி (பெருமாநல்லுார்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கோவை கலெக்டர் ஆபீசில், ஏப்., 20ல் நடந்த பேச்சுவார்த்தையில் 15 மற்றும் 10 சதவீதம் கூலி உயர்வு அறிவித்து, 21ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த ஜவுளி உற்பத்தியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், முழுமையாக கூலி உயர்வு வழங்கவில்லை. நடைமுறைப்படுத்தாமல் உள்ளதால், பெரும் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, அறிவித்த கூலி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒரு வார காலத்தில் நடத்தி விசைத்தறியாளர்கள் கருத்தை கேட்டறிந்து அடுத்த கட்ட போராட்டத்தை தீர்மானிப்பது, முதல்வர் தலையிட்டு ஏப்., 20-ம் தேதி அறிவிப்பு செய்த கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் உடனடியாக அமல்படுத்த போர்க் கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசைத்தறியாளர்கள் அடுத்த கட்ட போராட்டத்துக்கு செல்லாமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.