/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஓட்டுக்கு நோட்டு கலாசாரம்... குழந்தைகள் மனதில் பதிந்த விவகாரம்ஓட்டுக்கு நோட்டு கலாசாரம்... குழந்தைகள் மனதில் பதிந்த விவகாரம்
ஓட்டுக்கு நோட்டு கலாசாரம்... குழந்தைகள் மனதில் பதிந்த விவகாரம்
ஓட்டுக்கு நோட்டு கலாசாரம்... குழந்தைகள் மனதில் பதிந்த விவகாரம்
ஓட்டுக்கு நோட்டு கலாசாரம்... குழந்தைகள் மனதில் பதிந்த விவகாரம்
ADDED : ஜூலை 06, 2024 08:53 PM
நர்சரி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மத்தியில் கூட தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையிலான நிகழ்ச்சிகளை பள்ளி நிர்வாகங்கள் நடத்துகின்றன. 'பட்டம் விடும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா' என்று ஒன்றை நடத்துவதே, அவர்களின் தன்னம்பிக்கை வளர்ப்பதற்காக தான்.
கல்வியாண்டு துவங்கியவுடன் பள்ளிகள் தோறும் மாணவர் தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர். மாணவர்கள், பல அணிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணிக்கும் தலைவர்கள் நியமிக்கப்படுவர். தங்கள் தனித்திறன் சார்ந்த செயல்பாடுகளில், அணிகளில் உள்ள மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவும். இதன் வாயிலாக தன்னம்பிக்கை, ஆளுமைப்பண்பு உள்ளிட்டவை வளரும்.
ஜனநாயக முறைப்படி, ஓட்டெடுப்பின் வாயிலாக மாணவ, மாணவியரே அவர்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். போட்டிக் களத்தில் நிற்கும் மாணவர்கள், ஒவ்வொரு வகுப்பாக சென்று, சக மாணவ, மாணவியரை நேரில் சந்தித்து, ஆதரவு திரட்டும் நிகழ்வும் நடப்பதுண்டு.
அப்படியாக, ஒரு தனியார் பள்ளியில் மாணவ தலைவன் தேர்தலில் போட்டியிடும் மாணவனும், அவரது ஆதரவாளர்களும், ஒவ்வொரு வகுப்பாக சென்று ஓட்டு கேட்டனர். ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர், 'ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீங்க'ன்னு கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்தது, ஓட்டு கேட்க வந்த மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் தான்.
இது மேலோட்டாக பார்க்கையில், வேடிக்கையான இருப்பினும், 'ஓட்டுக்கு நோட்டு' என்ற ஜனநாயகத்தின் தொற்று நோய், மாணவ சமுதாயத்தினர் மனதிலும் வேரூன்ற துவங்கியிருக்கிறது என்பதுதான், வேதனை.
ஒவ்வொரு பிள்ளைக்கும் தன் பெற்றோர் தான், 'ரோல் மாடல்'. அவர்களை பார்த்து தான் குழந்தை வளர்கிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்' என்ற பழமொழிக்கேற்க, குழந்தைகளின் வளர்ப்பிலும், வார்த்தெடுப்பிலும் வருகிற மாற்றத்துக்கு காரணம் வீடுகளில் நிலவும் சூழல் தான், என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர், 'ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீங்க'ன்னு கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்தது, ஓட்டு கேட்க வந்த மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் தான்.