Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேத பாடசாலை முதல்வர் மணி விழா வேத சிவாகம மாநாட்டுடன் நடந்தது

வேத பாடசாலை முதல்வர் மணி விழா வேத சிவாகம மாநாட்டுடன் நடந்தது

வேத பாடசாலை முதல்வர் மணி விழா வேத சிவாகம மாநாட்டுடன் நடந்தது

வேத பாடசாலை முதல்வர் மணி விழா வேத சிவாகம மாநாட்டுடன் நடந்தது

ADDED : ஜூன் 22, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்: பெங்களூரு வேத ஆகம சமஸ்கிருத மஹா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் - மஹாலட்சுமி தம்பதியர் மணி விழா, அவிநாசியில் விமரிசையாக நடந்தது.

பெங்களூரு வேத ஆகம சமஸ்கிருத மஹா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் - மஹாலட்சுமி தம்பதியர், மணி விழா ஆட்டையம்பாளையம் செந்துார் மஹாலில் நடந்தது.

மணி விழாவையொட்டி, 'வேத சிவாகம வித்வத் ஸதஸ்' மாநாடு நடந்தது; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் குருத்துவ மிராஸ் சிவக்குமார் வரவேற்றார்.

கூனம்பட்டி ஆதினம் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள், பெங்களூரு ஞானாக்ஷஷி ராஜராஜேஸ்வரி தேவஸ்தானம் சபேச சிவாச்சார்யார், சிவகிரி ஆதினம் பாலமுருகன் ஈசன் சிவாச்சார்யார், மருதுறை ஆதினம் அருண் ஆலாலசுந்தர பண்டித குருசுவாமிகள், கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் ஆகியோர் தலைமை வகித்தனர்.

பிள்ளையார்பட்டி சிவநெறி கழக வேதாகம பாடசாலை முதல்வர் பிச்சை சிவாச்சார்யார், மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் ரவிசுவாமிநாத சிவாச்சார்யார், புதுச்சேரி வேத ஆகம ஆய்வு நிறுவன இயக்குனர் அபிராமசுந்தரம், சென்னை காளிகாம்பாள் கோவில் காளிதாச சிவாச்சார்யார்;திருப்பரங்குன்றம் ஸ்கந்த குரு வித்யாலயா ஆகம ஆசிரியர் கார்த்திகேய சிவம், திருப்பதி வெங்கடேஸ்வரா வேத பல்கலை கார்த்திகேய சிவாச்சார்யார், திருப்பரங்குன்றம் ராஜாபட்டர் உள்ளிட்டோர் பேசினர்.

பெங்களூரு ஸ்ரீகுருகுலம் இயக்குனர் அபிராமசுந்தரம் சிறப்புரையாற்றினார். மணிவிழா கொண்டாடிய சுந்தரமூர்த்தி சிவம் ஏற்புரையாற்றினார். முன்னதாக, 21ம் பட்டாச்சார்யார்களால் ஸ்ரீசுதர்ஷன யாகமும், ஸ்ரீகுருகுலம் வித்யார்த்திகளால் ருத்ரைகாதசினி பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து மணிவிழா கொண்டாடிய தம்பதியருக்கு கலசாபிேஷகம் நடந்தது.

விழாவில், 'ப்ராயச்சித்த விதி' என்ற சைவ ஆகம நுால் மற்றும் சைவ ஆகமங்கள் என்ற நுால்கள் வெளியிடப்பட்டன. மணி விழா, கடந்த 18ம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் நடைபெற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us