/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தீர்வு காணா பிரச்னைகள்... திணறலுடன் மக்கள் தீர்வு காணா பிரச்னைகள்... திணறலுடன் மக்கள்
தீர்வு காணா பிரச்னைகள்... திணறலுடன் மக்கள்
தீர்வு காணா பிரச்னைகள்... திணறலுடன் மக்கள்
தீர்வு காணா பிரச்னைகள்... திணறலுடன் மக்கள்

வீடுகளுக்குள் மழைநீர்
புவி அமைப்பில் திருப்பூர் - பெருமாநல்லுார் ரோடு, மேட்டுப்பாங்கானதாகவும், கண்ணகி நகர் துவங்கி, கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம் வரை தாழ்வானதாகவும் உள்ளது. கன மழை பெய்தால், அம்பேத்கர் காலனி, கஞ்சம்பாளையம் பிரிவு சந்திப்பு, சின்ன பொம்மநாயக்கன் பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் சென்று விடும் நிலை உள்ளது.
பாம்புகளின் புகலிடம்
நெசவாளர் காலனி பள்ளிக்கு பின்புறம் மாநகராட்சி நகர்நல மையம் செயல்படுகிறது. முன்புறம் முட்புதர் மண்டியுள்ளதால், நகர்நல மையம் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. இதனால், பாம்புகள் வளாகத்துக்குள் வந்து விடும் நிலை உள்ளது.
வாகனம் தடுமாற்றம்
வாகன போக்குவரத்து நிறைந்துள்ள காட்டன் மில் ரோடு, பனியன் சந்தையாக 'மினி காதர்பேட்டை'யாக செயல்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்கின்றன. வெள்ளை பெயின்ட், அடையாளம், அறிவிப்பு எதுவும் இல்லை. வேகத்தடை இருக்குமிடமே தெரியாமல், பலர் தடுமாறுகின்றனர். ஆங்காங்கே குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடாததால், மற்ற வார்டுகளை போல், இந்த வார்டிலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
வகுப்பறைகள் தேவை
வார்டில் வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் படிக்கும் பள்ளி யாக நெசவாளர் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 37 ஆண்டு களாக செயல்படும் இப்பள்ளிக்கு கூடுதலாக ஆறு வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.
'தொட்டி' அரசியல்
அம்பேத்கர் நகர் விரிவு பகுதியில் உப்புத் தண்ணீர் வழங்க போர்வெல் போட்டு, தண்ணீர் தொட்டி கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அரசியல் 'தலையீடு' காரணமாக தொட்டி கட்டாமல், அவற்றுக்கு நடப்பட்ட துாண்கள் மட்டும் காட்சி பொருளாக உள்ளது.
இதற்குமா தாமதம்?
பாரதி நகரில் இருந்து பி.என்., ரோடு வடக்கு உழவர் சந்தை, ஸ்ரீ நகர் சந்திப்புக்கு செல்லும் சாலையில் சாக்கடை கால்வாயில் அதிகளவில் தேங்கியிருந்த மண்ணை அள்ளி ரோட்டில் கொட்டி ஒரு மாதமாகிறது. அந்த மண்ணில் செடிகள் முளைத்து விட்டன. இன்னமும் அள்ளி செல்லவில்லை.
சாலை உயரட்டும்
ராஜாஜி நகர் நான்காவது வீதியில் சிமென்ட் சாலை சேதமாகி இரண்டு மாதத்துக்கும் மேலாகி விட்டது. இருமுறை வாகன ஓட்டிகள் விழுந்து விபத்து நடந்த போதும், இன்னமும் சரிசெய்யவில்லை. கண்ணகி நகர் - பி.என்., ரோடு சந்திப்பு சாலை உயரமாக உள்ளது.
கால்வாய் உயரட்டும்
ஜே.பி., நகரில் இருந்து - கஞ்சம்பாளையம் பிரிவு வரை விரிவான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. மழைநீர் வடிகால் உயரம் குறைவாக இருப்பதால், சிறிய அளவில் மழை பெய்தாலும், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது.