ADDED : மார் 25, 2025 06:40 AM
திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், காசநோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாநகராட்சி நகர்நல மைய டாக்டர் பிரவீன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, காசநோய் தடுப்பது, அறிகுறிகள் தென்பட் டால் உடனடியாக டாக்டரை சந்திப்பது, சிகிச்சை துவங்குவது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.
மாணவ செயலர்கள் மதுகார்த்திக், செர்லின் கிருஷ்ணமூர்த்தி, பிரவீன், லோகேஸ்வரி, சின்மயி தலைமையில், 'காசநோய் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்' எனும் தலைப்பில் மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.