/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மதுக்கடை வேண்டாம் பொதுமக்கள் எதிர்ப்பு மதுக்கடை வேண்டாம் பொதுமக்கள் எதிர்ப்பு
மதுக்கடை வேண்டாம் பொதுமக்கள் எதிர்ப்பு
மதுக்கடை வேண்டாம் பொதுமக்கள் எதிர்ப்பு
மதுக்கடை வேண்டாம் பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : மார் 25, 2025 06:45 AM

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனு அளிக்கப்பட்டது.
பல்லடம் வடக்கு ஒன் றிய பா.ஜ., தலைவர் நித்யா தலைமையில், பொதுமக்கள் அளித்த மனு:
கரைப்புதுார் கிராமத்தில், அருள்புரம், தண்ணீர் பந்தல், லட்சுமி நகர், குன்னாங்கல்பாளையம், சின்னக்கரை பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
சின்னக்கரை பகுதியில், சாய ஆலைகள், பின்னலாடை நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில் பெண்கள் அதிகம் பணிபுரிகின்றனர். அருள்புரத்தில் டி.ஆர்.ஜி., மண்டபம் அருகே மதுக்கடை அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பகுதியில் தனியார் பள்ளி, உப்பிலிபாளையம் அரசு பள்ளி, சேகாம்பாளையம் அரசு பள்ளி, சின்னக்கரையில் தனியார் கல்லுாரி இயங்குகின்றன.
இப்பகுதியில் மதுக்கடை அமைந்தால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, மதுக்கடை அமைக்கக்கூடாது. எதிர்ப்பையும் மீறி அமைத்தால், மக்களை திரட்டி போராடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.