/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அமராவதி ஆற்றங்கரையில் இயக்க முன்னோடிகளுக்கு திதி அமராவதி ஆற்றங்கரையில் இயக்க முன்னோடிகளுக்கு திதி
அமராவதி ஆற்றங்கரையில் இயக்க முன்னோடிகளுக்கு திதி
அமராவதி ஆற்றங்கரையில் இயக்க முன்னோடிகளுக்கு திதி
அமராவதி ஆற்றங்கரையில் இயக்க முன்னோடிகளுக்கு திதி
ADDED : செப் 22, 2025 10:12 PM

உடுமலை:
கடத்துார் அமராவதி ஆற்றங்கரையில், ஹிந்து இயக்க முன்னோடிகளுக்கு, பித்ரு தர்ப்பண திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மடத்துக்குளம் அருகே கடத்துாரில், பழமை வாய்ந்த அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலையொட்டி செல்லும் அமராவதி ஆற்றின் கரையில், அமாவாசை உள்ளிட்ட நாட்களில், திதி கொடுக்கப்படுகிறது.
அவ்வகையில், ஹிந்து இயக்க முன்னோடிகள் ராமகோபாலன் உள்ளிட்டோருக்கு, பித்ரு தர்ப்பண திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தாந்தோணி வடிவேல் தலைமை வகித்தார்.
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ரமணன், இந்து சாம்ராஜ்யம் சக்திவேல் போடிபட்டி மதன் பண்டிட், சுண்டக்காபாளையம் சீனிவாசன், அசோக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.