ADDED : செப் 09, 2025 10:14 PM

உடுமலை; பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவில், பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் கணேசபாண்டியன் வரவேற்றார்.
திருப்பூர் மாவட்ட நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், 'இயற்கையை நேசிக்க மரம் நடுவோம்' என்ற தலைப்பில் பேசினார். பள்ளி வளாகத்தில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
மாணவர்கள் தேர்வறைகள், வகுப்பறைகளை துாய்மைப்படுத்தினர். ஆசிரியர் ஜெகநாதஆழ்வார்சாமி நன்றி தெரிவித்தார்.