/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆசிரியர்களுக்கும் உளவியல் பயிற்சி மாணவர்களை கையாள தேவை ஆசிரியர்களுக்கும் உளவியல் பயிற்சி மாணவர்களை கையாள தேவை
ஆசிரியர்களுக்கும் உளவியல் பயிற்சி மாணவர்களை கையாள தேவை
ஆசிரியர்களுக்கும் உளவியல் பயிற்சி மாணவர்களை கையாள தேவை
ஆசிரியர்களுக்கும் உளவியல் பயிற்சி மாணவர்களை கையாள தேவை
ADDED : செப் 09, 2025 10:15 PM
உடுமலை; மாணவர்களின் மன ரீதியான பிரச்னைகளை கையாளுவதற்கு, ஆசிரியர்களுக்கும் உளவியல் பயிற்சி அளிப்பதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள், குடும்ப சூழல், பொருளாதார வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அதுபோல்,ஆசிரியர்களுக்கும் மாணவர்களை கையாள்வது, கற்பித்தல் மற்றும் பள்ளி சூழலில் ஏற்படும் பிரச்னைகளால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போதைய சூழலில், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு, ஆசிரியர்களும் நாள்தோறும் வீட்டுப்பயிற்சி எடுத்து வருகின்றனர். மாணவர்களின் பதிவேடுகள், தனித்திறன் வளர்ப்பு போட்டிகள், செயல்வழிக்கற்றலுக்கான படைப்புகள் என பலவழிகளிலும் ஆசிரியர்களுக்கு பள்ளி தொடர்பான சிந்தனை மட்டுமே அதிகரித்துள்ளது.
இதனால், அவர்களும் மனதளவில் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புள்ளதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.மேலும் பள்ளியில் உள்ள மாணவர்கள் பல உளவியல் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்னை கண்டறிவதற்கும், முறையாக அதை கையாளுவதற்கும் ஆசிரியர்களுக்கும் உளவியல் பயிற்சி தேவைப்படுகிறது.
மாணவர்களுக்கு இருப்பதுபோல், ஆசிரியர்களும், பல்வேறு உளவியல் பிரச்னைகளை பள்ளிகளில் சந்திக்கின்றனர். இதனால் அவர்கள் மன அழுத்ததிற்கும் ஆளாகின்றனர்.
மாணவர்களின் பிரச்னைகளை கேட்பதற்கும், முறையான வழிகாட்டுதல் வழங்குவதற்கும் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
கல்வித்துறை அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.