ADDED : செப் 12, 2025 11:02 PM
திருப்பூர்; திருப்பூர், குமரன் ரோட்டில், எம்.ஜி.ஆர்., சிலை அருகே, வளர்மதி சுரங்கப்பாதை பணி நடைபெற உள்ளது.
இதற்காக, இன்று (13ம் தேதி) காலை, 7:00 மணி முதல் சோதனை ஓட்டமாக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.