ADDED : செப் 12, 2025 11:02 PM
திருப்பூர்; காங்கயம் நகர பகுதியில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, நேற்று முன்தினம் பிரசாரம் மேற் கொண்டார்.
இதற்காக, அனுமதி பெறாமலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் பேனர் வைக்கப்பட்டதாக, 3வது வார்டு கவுன்சிலர் விக்னேஷ்குமார், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி விக்னேஷ்குமார், 15வது வார்டு செயலாளர் பிரபாகரன், இளைஞரணி செயலாளர் வினோத் ஆகிய அ.தி.மு.க.,வினர் நான்குபேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.