உழவர் சந்தையில் தக்காளி விலை சரிவு
உழவர் சந்தையில் தக்காளி விலை சரிவு
உழவர் சந்தையில் தக்காளி விலை சரிவு
ADDED : பிப் 23, 2024 11:36 PM
உடுமலை;உடுமலை உழவர்சந்தையில், தக்காளி விலை குறைந்து வருகிறது.
உடுமலை உழவர்சந்தைக்கு, உடுமலை, மடத்துக்குளம் பகுதி சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, விவசாயிகள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து வருகிறது.
உடுமலை உழவர்சந்தையில், நேற்று தக்காளி விலை, கிலோ ரூ. 12 முதல் 16 வரையும், உருளைக்கிழங்கு, 40 - 55 வரையும், சின்னவெங்காயம், 30 - 35 வரையும், பெரியவெங்காயம், 28 - 33 வரையும், மிளகாய், 45 - 50 வரையும், கத்தரிக்காய், 20 - 24 வரையும், வெண்டைக்காய், 35 - 38 வரையும்,
முருங்கைக்காய், 70 - 80 வரையும், பீர்க்கங்காய், 45 - 50 வரையும், சுரைக்காய், 15 - 20 வரையும்,
புடலங்காய், 20 - 25 வரையும், பாகற்காய், 45 - 50 வரையும், தேங்காய், 30 - 35 வரையும், முள்ளங்கி, 12 - 15 வரையும், பீன்ஸ், 70 - 75 வரையும், அவரைக்காய், 38 - 42 கேரட், 80 - 90, வாழைப்பழம் 40 - 50 ரூபாய்க்கும் விற்பனையானது.