'தேர்தல் என்பது யுத்தம் அல்ல!': ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு
'தேர்தல் என்பது யுத்தம் அல்ல!': ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு
'தேர்தல் என்பது யுத்தம் அல்ல!': ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பேச்சு

இயற்கை
எந்த பிரச்னையாக இருந்தாலும் அதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுதான் இயற்கை. நான் சொல்வது மட்டுமே சரி, மற்றவர்கள் சொல்வது தவறு என்று நினைக்க கூடாது. என் கருத்தை தவிர வேறு கருத்துக்கு இடமில்லை என நம்பக் கூடாது. பார்லிமென்ட் என்பது அனைத்து தரப்பின் நியாயங்களையும், வாதங்களையும் எடுத்துக் கூற வேண்டிய இடம். எதையும் புறக்கணிக்கவோ, தடுக்கவோ கூடாது.
உண்மை சேவகர்
தேர்தல் என்பது யுத்தம் அல்ல. பலத்தை எல்லாம் காட்டி ஆக்ரோஷமாக தேர்தல் களத்தில் செயல்பட வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல் பிரசாரத்தில் கண்ணியமும், நாகரிகமும் அவசியம். இந்த தேர்தலில் அவை பின்பற்றப்படவில்லை. தேர்தல் என்பது குறுகிய கால செயல்பாடு. அது முடிந்ததும், தேசத்தின் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும், அதற்கு எல்லா தரப்பின் ஒத்துழைப்பும் தேவை என்பதையும் மனதில் கொண்டால் எல்லைகளை மீறாமல் பிரசாரம் செய்யலாம்.
ஆன்மிக எழுச்சி
உலகெங்கிலும் சமூகங்கள் படிப்படியாக மேம்பட்டு வந்துள்ளன. அதற்கேற்ப சமூக அரசியல் கட்டமைப்புகள் மாற்றம் பெற்று வருகின்றன. டாக்டர் அம்பேத்கர் சொன்னதை போல, எந்த ஒரு முக்கியமான சமூக மாற்றத்துக்கும், ஆன்மிக எழுச்சியும் அவசியமாகிறது. ஆயிரம் ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டும், பின்தள்ளப்பட்டும், பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்ட சமூகங்களில் அதிருப்தியும் பிளவுபட்ட சிந்தனைகளும் இருந்தால் அது இயல்பானது என்பதை உணர வேண்டும்.