பக்ரீத் சிறப்பு தொழுகை
* திருப்பூர் பெரிய கடை வீதி பெரிய பள்ளி வாசல், காலை 7:00 மணி.
தேர்த்திருவிழா
ஸ்ரீ விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், காலை 10:00 மணி. பஞ்சமூர்த்தி புறப்பாடு, பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம், கருட சேவை புறப்பாடு, மாலை, 6:00 மணி. 'சாய் கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ்' நாட்டிய நிகழ்ச்சி, மாலை 6:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன், ஜீவா நகர், கே.வி.ஆர்., லே அவுட், திருப்பூர். பால்குடம் எடுத்தல், காலை, 7:00 மணி. அம்மனுக்கும், விநாயகருக்கும் தீர்த்தம் ஊற்றுதல், 3:00 மணி.
யோகா பயிற்சி
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:00 முதல் 7:00 மணி வரை.
கடல் கன்னி கண்காட்சி
மரைன் எக்ஸ்போ கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம். மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.