/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மக்காத குப்பைகளால் வாய்க்கால் மாயம் மக்காத குப்பைகளால் வாய்க்கால் மாயம்
மக்காத குப்பைகளால் வாய்க்கால் மாயம்
மக்காத குப்பைகளால் வாய்க்கால் மாயம்
மக்காத குப்பைகளால் வாய்க்கால் மாயம்
ADDED : ஜூன் 07, 2025 12:54 AM

பொங்கலுார்; திருப்பூர் மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக பி.ஏ.பி., வாய்க்கால் பாசனம் விளங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தின் பல பகுதிகளில் கிளை வாய்க்கால்கள் செல்கின்றன. நகரமயமாக்கல் காரணமாக கிராம பகுதிகளும் குடியிருப்பு பகுதிகளாக மாறி வருகின்றன.
மக்கள் தொகை அதிகரிக்கும் பொழுது குப்பைகளும் சேர்ந்து அதிகரிக்கிறது. இதுவே பிரதான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் எங்கு பார்த்தாலும் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பி.ஏ.பி., வாய்க்காலும் தப்பவில்லை.
பொதுப்பணித்துறையால் பிரதான வாய்க்காலையே குப்பை இல்லாமல் சுத்தமாக பராமரிக்க முடியவில்லை. கிளை வாய்க்கால்களை அவர்கள் மறந்தே விட்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீர் வருவதால் விவசாயிகளால் தொடர்ந்து கிளை வாய்க்கால்களை பராமரிக்க முடிவதில்லை. இதனால், பல இடங்களில் கிளை வாய்க்கால்கள் மறையும் அளவுக்கு குப்பைகள் கொட்டப்படுகின்றன.
ஒவ்வொரு முறை தண்ணீர் திறக்கும் பொழுதும் விவசாயிகள் வாய்க்கால்களை தூர்வார படாத பாடு படுகின்றனர். குப்பை பிரச்னை விவசாயிகளுக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. வாய்க்கால்களில் கிடக்கும் குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.