Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  

ADDED : மார் 16, 2025 12:06 AM


Google News
n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு வேள்வி - காலை 9:00 மணி. திருமஞ்சனம் - 9:30 மணி. நாம சங்கீர்த்தனம் - 11:00 மணி. மகா தீபாராதனை - 11:30 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.

ருத்ர ஜப பாராயணம்

ஸ்ரீ கைலாசநாதருக்கு ஏகாதசி ருத்ர ஜப பாராயணம், ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ ஐயப்ப பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட். காலை 8:00 முதல் 11:30 மணி வரை.

தேர்த்திருவிழா

திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. பிரம்ம தாண்டவ தரிசன காட்சி - காலை 11:00 மணி. பன்னிரு திருமுறை தொடர்ந்து பாடி உலக புத்தகத்தில் இடம் பெற்ற, தேவதர்ஷனி சண்முகம் இன்னிசை கலை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. சிலம்பாட்ட நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.

சைவ சித்தாந்த பயிற்சி

திருவருள் அரங்கம், ஹார்வி குமாரசாமி 'பி' திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த பயிற்சி மையம். காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

சிறப்பு பூஜை

ஸ்ரீ சிவவிஷ்ணு கோவில், அங்கேரிபாளையம், திருப்பூர். பால ஆஞ்சநேயருக்கு பங்குனி மாத சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் - காலை 9:30 முதல் 10:30 மணி வரை.

திருவாசகம்

விளக்க உரை

சைவர் திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றோதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தவக்கால நிகழ்ச்சி

புனித தோமையர் ஆலயம், தாமஸ்புரம், சேவூர் ரோடு, அவிநாசி. இளைஞர், இளம் பெண்களுக்கான தியானம் - காலை 8:30 மணி. திருப்பலி - 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை.

பொது
துவக்க விழா

தெய்வசிகாமணி நினைவு அறக்கட்டளை துவக்க விழா, நுால் வெளியீட்டு விழா, தெற்கு ரோட்டரி சங்கம், நடராஜா தியேட்டர் எதிரில், திருப்பூர். பங்கேற்பு: சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார், கேரள முன்னாள் கவர்னர் சதாசிவம், மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார். காலை 9:30 மணி.

கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம், லயன்ஸ் சங்கம், டவுன் ஹால் ஸ்டாப் அருகில், குமரன் ரோடு, திருப்பூர். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

சிறப்பு நிகழ்ச்சி

'சிரிப்போம் சிந்திப்போம்' சிறப்பு நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை முற்றம் டிரஸ்ட். தலைப்பு: 'மனம் எனும் மேடையின் மேல்' - பேச்சாளர் திருச்சி அமுதா ராமனுஜம். தலைப்பு: 'சிரிப்பும் - பொறுப்பும்' பேச்சாளர்: திருவாரூர் சண்முகவடிவேலு. மாலை 5:30 மணி.

தள்ளுபடி விற்பனை

அதிரடி தள்ளுபடி விற்பனை மேளா, கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸ், கிழக்கு மேற்கு ரத வீதி, அவிநாசி. காலை 10:00 மணி முதல்.

ஆலோசனை முகாம்

30ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மகப்பேறு, கருத்தரிப்பு, மகளிர் நல ஆலோசனை முகாம், ரேவதி மெடிக்கல் சென்டர், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

போராட்டம்

ரேஷனில் அரிசி கடத்தும் கும்பலை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம், குடிமை பொருள் மற்றும் குற்றபுலனாய்வுத்துறை போலீஸ் ஸ்டேஷன் முன், வீரபாண்டி. திருப்பூர். ஏற்பாடு: வி.சி.க., காலை 10:00 மணி.

'ெஹல்த் பிட்னஸ்'

கண்காட்சி

காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பாலா ஆர்தோ மருத்துவமனை, அப்பல்லோ பொது மருத்துவ மனை. காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.

n விளையாட்டு n

இறகுப்பந்து போட்டி

இரட்டையர் இறகுப்பந்து போட்டி, பன் அண்ட் ப்ரோலிக் உள்விளையாட்டு அரங்கம், அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி சையத் பேட்மின்டன் அகாடமி. காலை 8:00 மணி முதல்.

ரேக்ளா பந்தயம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா ரேக்ளா பந்தயம் 200 மற்றும், 300 மீ., போட்டிகள், மரப்பாலம், பல்லடம் - பொள்ளாச்சி பை -பாஸ் ரோடு. ஏற்பாடு: பல்லடம் நகர தி.மு.க., காலை 6:00 முதல் மாலை 6:00மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us