Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் திருப்பூருக்கு பிரதிநிதித்துவம் இல்லை!

மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் திருப்பூருக்கு பிரதிநிதித்துவம் இல்லை!

மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் திருப்பூருக்கு பிரதிநிதித்துவம் இல்லை!

மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் திருப்பூருக்கு பிரதிநிதித்துவம் இல்லை!

ADDED : ஜூன் 10, 2025 11:19 PM


Google News
திருப்பூர்:

மாவட்ட வாரியாக ஏராளமான நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுகின்றன.

இதில், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை தீர்வு காண்பதில், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது; சட்டப்படி நுகர்வோருக்கு கிடைக்க வேண்டிய பலன்களை பெற்றுத் தருவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மாவட்ட பதிவுத்துறையில் பதிவு பெற்று, முறைப்படி இயங்கும் நுகர்வோர் சங்கங்களை தான், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் அங்கீகரிக்கின்றன. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலில், அவர்களுக்கு பிரதிநிதித்துவமும் வழங்கப்படுகிறது.

அதேபோல், மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் செயல்படுகிறது. தற்போது, மாநில கவுன்சில் மறு சீரமைக்கப்பட்டு, 23 உறுப்பினர்களுடன் புதிய பட்டியலை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், திருப்பூர் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.

பெருத்த ஏமாற்றம்!


இது குறித்த, நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர்பாஷா கூறியதாவது:

திருப்பூர், புதிதாக உருவான மாவட்டம். இங்கு, நுகர்வோர் நலன் சார்ந்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தென்படும் தோல்வி, மாசு கலந்து ஓடும் ஆறு, ஓடைகள், போக்குவரத்து நெரிசல், ரோடு ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது.

அவ்வப்போது மாவட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு பிரச்னைகள் கொண்டு செல்லப் பட்டாலும், மாநில குழுவில் பிரதிநிதித்துவம் பெறுவது அவசியம்.

முறையாக பதிவு பெற்று சிறப்பான முறையில் இயங்கும் ஏதாவது ஒரு நுகர்வோர் அமைப்புக்கு பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கலாம்.

இதுதொடர்பான பரிந்துரையை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை என்றே தெரிகிறது. இது, பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us