/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாய ஆலையில் விஷவாயு 3 பேர் பலியான விவகாரம் சாய ஆலையில் விஷவாயு 3 பேர் பலியான விவகாரம்
சாய ஆலையில் விஷவாயு 3 பேர் பலியான விவகாரம்
சாய ஆலையில் விஷவாயு 3 பேர் பலியான விவகாரம்
சாய ஆலையில் விஷவாயு 3 பேர் பலியான விவகாரம்
ADDED : மே 22, 2025 03:40 AM
திருப்பூர்; திருப்பூர் அருகே சாய ஆலையில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி, மூன்று பேர் இறந்தனர். இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் - கரைப்புதுாரில் சாய ஆலை நிறுவனத்தில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணிக்கு, ஐந்து பேர் சென்றனர். ஏழு அடி ஆழமுள்ள தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது, விஷவாயு தாக்கி ஐந்து பேரும் மயக்கமடைந்தனர். அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அதில், திருப்பூர் சுண்டமேட்டை சேர்ந்த சரவணன், 30, வேணுகோபால், 31 மற்றும் ஹரிகிருஷ்ணன், 26 என, மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர்.
விஷவாயு தாக்கிய விவகாரம் தொடர்பாக, பல்லடம் போலீசார் மனித கழிவை கையால் அள்ளும் தடுப்பு சட்டம் உட்பட, நான்கு பிரிவின் கீழ், உரிமையாளர் நவீன், மேலாளர் தனபால், கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் லாரி டிரைவர் சின்னசாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர்.
இருவர் கைது
இச்சூழலில், சின்னக்கரையை சேர்ந்த தனபால், 50, சாய ஆலை கண்காணிப்பாளர் அரவிந்த், 47 என, இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் நவீனை தேடி வருகின்றனர்.
சிகிச்சையில் இருக்கும் சின்னசாமியின் மனைவி ஜோதிமணி மற்றும் மகள், வி.சி., கட்சியினர் உள்ளிட்டோர் எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், சிகிச்சையில் இருக்கும் சின்னசாமியை விடுவித்து, பாதிக்கப்பட்ட அவருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.