/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தென்மேற்கு பருவ காற்று துவக்கம்; கோழி பண்ணையாளர் நிம்மதி தென்மேற்கு பருவ காற்று துவக்கம்; கோழி பண்ணையாளர் நிம்மதி
தென்மேற்கு பருவ காற்று துவக்கம்; கோழி பண்ணையாளர் நிம்மதி
தென்மேற்கு பருவ காற்று துவக்கம்; கோழி பண்ணையாளர் நிம்மதி
தென்மேற்கு பருவ காற்று துவக்கம்; கோழி பண்ணையாளர் நிம்மதி
ADDED : மே 22, 2025 03:41 AM
பொங்கலூர்; திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான கோழிப்பண்ணைகள் செயல்படுகின்றன. பெரும்பாலான விவசாயிகள் ஒப்பந்த முறையில், கூலிக்கு கோழி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இறப்பு விகிதம் அதிகரித்தால் கோழிப்பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். இதனால் பெரிய பண்ணையாளர்கள் முதல் சிறிய கோழி பண்ணை விவசாயிகள் வரை அனைவரும் பாதிக்கப்படுவர். சில மாதங்களாக கடுமையான வெப்பம் வாட்டி எடுத்தது. பண்ணையாளர்கள் தென்னை ஓலைகளை கூரையின் மீது பரப்பியும், பனித்துளிப் பாசன கருவிகளை அமைத்தும் பண்ணையை குளிர்ச்சியாக்க முயன்றனர். இருந்தும் கோழிகளின் இறப்பு விகிதம் அதிகரித்தது. கோழி களின் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த முடியாமல் பண்ணையாளர்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது தென்மேற்குப் பருவக்காற்று வீசத் துவங்கி உள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்துள்ளது. விரைவில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்க உள்ளதால் ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசும். இதனால் கோழிகளின் இறப்பு விகிதம் குறையும் என்பதால் பண்ணையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.