ADDED : ஜன 31, 2024 12:37 AM
திருப்பூர்:சென்னையை சேர்ந்தவர் தினேஷ், 35. இவர் கரூரில் ஒருவரிடம், ஐந்து லட்சம் ரூபாய்க்கு சீட்டு சேர்ந்துள்ளார். ஐந்து மாதத்தில் ஏலம் கூறி, சீட்டு எடுத்துள்ளார். தொடர்ந்து, சில மாதங்கள் மட்டும் கட்டிய நிலையில், மீதமுள்ள மாதங்களை கட்டாமல் இருந்தார்.
இச்சூழலில், சீட்டு பணத்தை கேட்டு, திருமுருகன்பூண்டியில் வசித்து வந்த தினேஷின் தம்பி மணிகண்டன், 30 என்பவரை, மங்கலத்துக்கு பணி நிமித்தமாக சென்ற போது, கரூரில் இருந்து கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்றது. புகாரின் பேரில் மங்கலம் போலீசார் விசாரித்தனர்.
இதுதொடர்பாக கரூர் சென்ற போலீசார், கடத்தி சென்ற மணிகண்டனை மீட்டு, குணசேகரன், 33, ரூபன், 25, அங்காளஈஸ்வரன், 25 என, மூன்று பேரை கைது செய்தனர். தலைமறைவான மேலும், மூன்று பேர் மற்றும் கடத்தி ஆட்களை அனுப்பிய நபர் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.