நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
ADDED : மே 14, 2025 08:52 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மே 13) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய போக்சோ
ஆட்டோ டிரைவருக்கு 'காப்பு'
தஞ்சாவூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்குமார், 32, ஆட்டோவில், 17 வயது சிறுமி, நீட் தேர்வுக்கான பயிற்சி நிலையத்திற்கு, ஏப்ரலில் சென்று வந்துள்ளார்.
சிறுமியை தன் மொபைல் போனில் போட்டோ எடுத்து வைத்த சுரேஷ்குமார், திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டியதுடன், அவ்வப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமி புகாரில், தஞ்சாவூர் மகளிர் போலீசார், போக்சோ வழக்குப்பதிவு செய்து, சுரேஷ்குமாரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஆந்திர வாலிபர் கைது
சேலம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் 9 வயது மகளுடன் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள கோயிலில் தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் இரவு, காச்சிகுடாவில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பினர்.
திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் துாங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், பலமனேரியை சேர்ந்த குமார், 30, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டார். குமாரை, பயணியர் உதைத்து, டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், குமாரை போக்சோவில் கைது செய்தனர்.
முதியவருக்கு 20 ஆண்டு சிறை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தர்மருக்கு 60, இருபதாண்டுகள் சிறை தண்டனை, ரூ.6000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கமுதி அருகேவுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த தர்மர் கடந்த 2022 ஏப்., 25ல் பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் பெற்றோர் புகாரில் தர்மரை கமுதி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இவ்வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தர்மருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.3000 அபராதமும், பெண் குழந்தை வன்கொடுமை போக்சோவில் 20 ஆண்டுகள் சிறை, ரூ.3000 அபராதமும் கட்டத்தவறினால் ஒரு வாரம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார். சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் கீதா ஆஜரானார்.