சிவனடியார்களுடன் திருவாசக கச்சேரி
சிவனடியார்களுடன் திருவாசக கச்சேரி
சிவனடியார்களுடன் திருவாசக கச்சேரி
ADDED : செப் 07, 2025 10:40 PM

திருப்பூர்; பக்கவாத்திய இன்னிசையுடன் கூடிய, திருவாசக இன்னிசை கச்சேரி, நேற்று நடந்தது.
சிவனடியார்கள் கூட்டாக இணைந்து, திருவாசகம் முற்றோதல் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்ட பத்தில் பக்கவாத்திய இன்னிசையுடன் கலந்து, திருவாசக பாடல்களை பாடும், இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆசிரியர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.
திருவாசகத்தை இன்னிசையுடன் பாடும் திறமை பெற்ற ஜெயலட்சுமியின் வழிகாட்டுதலுடன், பக்தர்களும், சிவனடியார்களும், நேற்று திருவாசக இன்னிசை கச்சேரி பாடினர்.
காலை, 8:00 மணிக்கு துவங்கிய இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி, மாலை 4:00 மணி வரை நடந்தது.
திருவாசகத்தில் உள்ள, 51 பதிகங்களையும், இன்னிசை கலந்து பாடியதை, பக்தர்கள் மெய்மறந்து கேட்டனர்; இன்னிசையுடன் பாடியும் மகிழ்ந்தனர்.