ADDED : ஜூன் 12, 2025 11:26 PM

திருப்பூர்; திருப்பூர் - அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., சிக்னலை கடக்கும் பஸ்கள் நடுரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்குவதை தவிர்க்க, பஸ் ஸ்டாப் அருகே இடது புறத்தில் பஸ்கள் நின்று செல்ல 'பஸ் பே', போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையால் ஏற்படுத்தப்பட்டது.
மையத்தடுப்பு ஏற்படுத்தியதால், பஸ்கள் இங்கு நின்று சென்றன. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருந்தது.சில தினங்கள் முன் பெய்த மழையால், மழைநீர் தேங்கியது.
சாலை கட்டமைப்பு தரமில்லாததால், பஸ் நிற்குமிடம் குண்டும் குழியுமாக மாறியது. தொடர்ந்து, பஸ்கள் அதிக பாரத்துடன் அவ்விடத்திலேயே நின்று பயணித்ததால், குழி பெரியதாக, தண்ணீர் வழிந்தோட வழியில்லாமல் அப்படியே தேங்கி நிற்கிறது.
நெடுஞ்சாலைத்துறை மூலம் மண் கொட்டப்படவில்லை. போக்குவரத்து போலீசார் இவ்விடத்துக்கு பஸ்களை இயக்காமல் 'ரோட்டில் நிறுத்தி செல்லுங்கள்' என்று சொல்வதற்கும் வழியில்லாமல் அப்படியே விட்டுள்ளனர்.
சேறும், சகதியுமான சாலையால் டிரைவர்கள் பாடு பெரும் சிரமமாக மாறியுள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பு.