Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் தங்கம், வெள்ளி திருட்டு

பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் தங்கம், வெள்ளி திருட்டு

பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் தங்கம், வெள்ளி திருட்டு

பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் தங்கம், வெள்ளி திருட்டு

ADDED : பிப் 06, 2024 01:30 AM


Google News
அனுப்பர்பாளையம்;திருப்பூர், நெருப்பெரிச்சல் - ஜி.என்., கார்டன் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 48. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன், ஜன., 26ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றார்.

கடந்த, 28ம் தேதி காலை வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த எட்டு பவுன் தங்க நகை, 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ஒரு மொபைல் போன்,லேப் டாப் ஆகியன திருடப்பட்டது.

பழனிசாமி, அப்பகுதியிலுள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் பொருளாளராக இருந்து வருகிறார். பாதுகாப்பு கருதி கோவில் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை தனது வீட்டில் வைத்திருந்தார். திருட்டு போன நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கோவிலுக்கு சொந்தமானது. அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தாயம்பாளையத்தில் திருட்டு


பொங்கலுார், தாயம்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேலன், 40 விவசாயி. நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு சோமனுாரில் உள்ள தன் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த பொழுது, பீரோவில் வைத்திருந்த, 13.75 சவரன் நகை, ஒரு டூவீலர், 90 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காணவில்லை.

இதுகுறித்து, அவர் அவிநாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு மொத்தமாக சுருட்டிய பலே திருடனை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us