"பேசுவதை விட்டுவிட்டு செயலில் காட்டுங்கள்": மத்திய அரசுக்கு மம்தா அட்வைஸ்
"பேசுவதை விட்டுவிட்டு செயலில் காட்டுங்கள்": மத்திய அரசுக்கு மம்தா அட்வைஸ்
"பேசுவதை விட்டுவிட்டு செயலில் காட்டுங்கள்": மத்திய அரசுக்கு மம்தா அட்வைஸ்
ADDED : ஜூன் 17, 2024 06:01 PM

கோல்கட்டா: 'பேசுவதை விட்டுவிட்டு செயலில் காட்டுங்கள்' என மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அட்வைஸ் வழங்கி உள்ளார்.
மே.வங்கத்தில் நடந்த ரயில் விபத்து குறித்து மம்தா கூறியதாவது: தேர்தலைப் பற்றி மட்டும் கவலைப்படும் பா.ஜ.,வுக்கு, பயணிகள் குறித்தோ, ரயில்வே ஊழியர்கள் குறித்தோ அக்கறை இல்லை. பேசுவதை விட்டுவிட்டு செயலில் காட்டுங்கள். அவர்களின் பழைய ஓய்வு ஊதிய திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
நான் ரயில்வே ஊழியர்கள் பக்கமே நிற்கிறேன். தங்களால் இயன்றவரை அவர்கள் செயல்பட முயற்சிக்கின்றனர். மத்திய அரசோ தேர்தலை பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. இவ்வாறு மம்தா கூறினார்.