ADDED : ஜன 06, 2024 12:45 AM
திருப்பூர்:வரத்து குறைவால் பச்சை மிளகாய் விலை கிலோவுக்கு, 20 ரூபாய் உயர்ந்துள்ளது. சீசன் நிறைவு பெற்று விட்டதால், சந்தையில் மருந்துக்கு கூட முருங்கை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், 14 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 350 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மொத்த விலையில் தக்காளி கிலோ, 25 ரூபாயாக உள்ளது. கறிவேப்பிலை - 80, கொத்துமல்லி - 50, புதினா - 40, வெண்டைக்காய் - 60, அவரைக்காய் - 100, உள்ளூர் அவரைக்காய் - 60, பீன்ஸ் - 60, மேராக்காய் - 30, முட்டைக்கோஸ் - 20, கத்தரிக்காய் - 110, கேரட் - 50, நுால்கோல் - 40, ஊட்டி பீட்ரூட் - 50, உள்ளூர் பீட்ரூட் - 30, பாகற்காய் - 60, பீர்க்கன்காய் - 60, சுரைக்காய் - 15, புடலங்காய் - 35, தட்டைக்காய் - 40 ரூபாய்.
கடந்த வாரம் கிலோ, 40 ரூபாயாக இருந்த உருளை கிழங்கு, வரத்து அதிகரிப்பால், 30 ரூபாயாக குறைந்துள்ளது. பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பு, விற்பனை மந்தநிலையால், கிலோ, 30 ரூபாய், சின்ன வெங்காயம், 45 ரூபாய்.
இதுவரை இல்லாத வகையில் முள்ளங்கி விலை உயர்ந்து, 50 ரூபாய், காலிபிளவர் நடுத்தரம், 30 ரூபாய், சிறியது, 20 ரூபாய்க்கு விற்றது.
தேங்காய் விலை தொடர்ந்து இரண்டு மாதமாக உயர்ந்தே உள்ளது. பொங்கலுக்கு பிறகு தான் குறையுமென எதிர்பார்க்கப்படு கிறது. கிலோவுக்கு, பத்து ரூபாய் உயர்ந்து, பப்பாளி, கிலோ, 30 ரூபாய். பனியால், தளை செழிப்பு இல்லாததால், கீரை வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
மணத்தக்காளி கீரை ஒரு கட்டு, எட்டு ரூபாய், அரைக்கீரை, ஏழு ரூபாய். சீசன் நிறைவு என்பதால், ஒரு முருங்கைக்காய், 15 ரூபாய். வழக்கமாக கிலோ, 35 முதல், 45 ரூபாய்க்கு விற்கும் பச்சைமிளகாய் வரத்து குறைவால், விலை உயர்ந்து கிலோ, 60 முதல், 65 ரூபாயாக உயர்ந்துள்ளது.