Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நம் நாட்டவர்களின் அறம் சார்ந்த வெற்றி

நம் நாட்டவர்களின் அறம் சார்ந்த வெற்றி

நம் நாட்டவர்களின் அறம் சார்ந்த வெற்றி

நம் நாட்டவர்களின் அறம் சார்ந்த வெற்றி

ADDED : ஜூன் 29, 2025 03:13 AM


Google News
பல்லடம் வனம் அமைப்பு சார்பில் நடந்த வான்மழை கருத்தரங்கிற்கு, அதன் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். இயற்கை விவசாயி பழனிசாமி, நுால் வெளியீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன், சிறப்பு விருந்தினர்கள் பாமயன், மருத்துவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

'நம்பிக்கை நகரம்' புத்தக ஆசிரியர், பாரதியார் பல்கலை ஆட்சிப் பேரவை உறுப்பினர் ஆதலையூர் சூரியகுமார் பேசியதாவது:

வெற்றியாளர்களைப் பற்றிய இப்புத்தகம் எழுத மூன்று ஆண்டு தேவைப்பட்டது. புத்தகம் எழுதவே மூன்று ஆண்டுகள் எனில், அவர்கள் வெற்றி பெற எத்தனை ஆண்டுகள் சிரமப்பட்டிருப்பார்கள்? வெளிநாட்டு வெற்றியாளர்களுக்கும், நம் நாட்டவர்களுக்கும் வேறுபாடு உள்ளது. அறத்தை சார்ந்தும்; நேர்மை, நியாயம் ஆகியவற்றை சார்ந்து வந்தவர்கள் நமது வெற்றியாளர்கள்.

உலகத்துக்கு, நேர்மறையான ஒரு கல்வியை தந்த விஷயம் கொங்கு மண்டலத்தில் இருந்துதான் ஆரம்பித்தது என்ற நற்பெயர் மட்டும் இப்புத்தகம் மூலம் கிடைத்தால் போதுமானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us