/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஓ.இ., மில் உரிமையாளர்களிடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் ஓ.இ., மில் உரிமையாளர்களிடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்
ஓ.இ., மில் உரிமையாளர்களிடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்
ஓ.இ., மில் உரிமையாளர்களிடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்
ஓ.இ., மில் உரிமையாளர்களிடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்
ADDED : ஜூன் 29, 2025 03:21 AM

பல்லடம் : ''நுால் கிடைக்காததால், ஏற்படும் தொழில் பாதிப்புகளை தவிர்க்கவும், சுமூக தீர்வு காணவும், ஓ.இ., மில் உரிமையாளர்கள் முன்வர வேண்டும்,'' என, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
நுால் கிடைக்காததன் காரணமாக, தட்டுப்பாடு ஏற்பட்டு, கூடுதல் விலைக்கு நுால் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கேற்றவாறு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 10 முதல் 15 ரூபாய் வரை நுால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மீட்டருக்கு, 3 முதல் 4 ரூபாய் என, விலை உயர்த்தப்பட்டுள்ளதால், துணிகளை வாங்கும் நுகர்வோர், கூடுதல் விலைக்கு அவற்றை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
துணி விலைகளை உயர்த்தினால், அண்டை மாநிலங்களுடன் போட்டி போட முடியாது. நுால் விலை ஏற்றம், தட்டுப்பாடு ஆகியன காரணமாக, தற்காலிகமாக, உற்பத்தியை குறைத்துள்ளோம்.
நுால் விலை உயர்த்தியதை நாங்கள் தவறாக கருதவில்லை. ஆனால், ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கான நுால் வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது சங்கடத்தை தருகிறது.
ஆர்டர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்ல நாமே வழி வகுத்ததாக அமைந்து விடும். ஓ.இ., மில் உரிமையாளர்களின் இந்த திடீர் நடவடிக்கையால், ஜவுளி உற்பத்தி தொழில் பாதிப்பதோடு, நலிவடைந்து வரும் விசைத்தறி தொழிலும் கடும் பாதிப்பை சந்திக்கும். எனவே, இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காண, ஓ.இ., மில் உரிமையாளர்கள் முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.