திருப்பூர்;தண்டவாளத்தை கடக்க முயன்ற டீ மாஸ்டர், ரயில் மோதி பலியானார்.
தேனியை சேர்ந்தவர், மகாராஜன், 58. டீ மாஸ்டர். திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டு, திருப்பூர் - ஊத்துக்குளி ரயில் வழித்தடத்தில் முதல் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தைக் கடந்த போது ரயில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவர் பலியானார். இதுகுறித்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.