Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/200 அரங்குகளுடன் கட்டுமான பொருள் கண்காட்சி துவங்கியது

200 அரங்குகளுடன் கட்டுமான பொருள் கண்காட்சி துவங்கியது

200 அரங்குகளுடன் கட்டுமான பொருள் கண்காட்சி துவங்கியது

200 அரங்குகளுடன் கட்டுமான பொருள் கண்காட்சி துவங்கியது

ADDED : ஜூலை 19, 2024 09:18 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்:திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் 19வது கட்டட கட்டுமான பொருள் கண்காட்சி, தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது. கட்டுமானத் துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களின் சார்பில், 200 அரங்குகள் இதில் இடம் பெற்றுள்ளது.

கண்காட்சியை அமைச்சர் சாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக சங்க செயலாளர் ஜார்ஜ் லியோ ஆனந்த் வரவேற்றார். சங்க தலைவர் அருண் கே.ரமேஷ் தலைமை வகித்தார். கண்காட்சி தலைவர் ஜனார்த்தனன் அறிக்கை வாசித்தார்.

விழாவில், 'பொறியியல் பொக்கிஷம் 2024' விழா மலரை எம்.எல்.ஏ., செல்வராஜ் வெளியிட, மேயர் தினேஷ்குமார் பெற்றுக்கொண்டார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநில துணைத்தலைவர் பிரபு, கண்காட்சி செயலாளர் கவுதம் உள்ளிட்டோர் பேசினர்.

மாநகராட்சி, 4வது மண்டல தலைவர் பத்மநாபன், கண்காட்சி பொருளாளர் சம்பத்குமார், உடனடி முன்னாள் தலைவர் ஜெயராமன், முன்னாள் மாநில தலைவர் தில்லைராஜன், மண்டலம் - 7ன் தலைவர் ஸ்டாலின் பாரதி, பட்டய கணக்காளர் செந்தில்குமார், முன்னாள் தலைவர்கள் சிதம்பரம், ரமேஷ்குமார், பொன்னுச்சாமி, தில்லைராஜன், மணிகண்டன், ரத்தினசபாபதி, முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த கண்காட்சி வரும் 22-ம் தேதி வரை 4 நாள், காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம். தினசரி மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கட்டுமானங்களுக்கு தேவையான, நவீன பொருட்கள், பசுமை கட்டுமானம், ரெடிமேட் கான்கிரீட் நிறுவனங்கள், மரம் சார்ந்த பொருட்கள், டைல்ஸ், கிரானைட், மார்பிள்ஸ், வுட்டன் ப்ளோரிங், மாடர்ன் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் பொருட்கள்; புதிய வடிவிலானா அலங்கார மின் விளக்குகள் மற்றும் புதிய பெயின்ட் வகைகள், குளியலறை பிட்டிங்ஸ் உட்பட பல பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

----

சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில், கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சியை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். அருகில், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us