/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொல்லியல் பகுதியை பாதுகாக்க உறுதி முடிவுக்கு வந்தது 738 நாள் போராட்டம் தொல்லியல் பகுதியை பாதுகாக்க உறுதி முடிவுக்கு வந்தது 738 நாள் போராட்டம்
தொல்லியல் பகுதியை பாதுகாக்க உறுதி முடிவுக்கு வந்தது 738 நாள் போராட்டம்
தொல்லியல் பகுதியை பாதுகாக்க உறுதி முடிவுக்கு வந்தது 738 நாள் போராட்டம்
தொல்லியல் பகுதியை பாதுகாக்க உறுதி முடிவுக்கு வந்தது 738 நாள் போராட்டம்
ADDED : மே 22, 2025 02:14 AM
திருப்பூர்:தொல்லியல் எச்சங்களை பாதுகாக்க கோரி குமரிக்கல்பாளையத்தில், 738 நாட்களாக நடந்த காத்திருப்பு போராட்டம், அமைச்சர் உறுதியளித்ததால், கைவிடப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி - காவுத்தம்பாளையம் ஊராட்சி குமரிக்கல்பாளையம் கிராமத்தில், துணை மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் முடிவெடுத்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, விவசாயிகள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள், '3,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான தொல்லியல் எச்சங்கள் இருப்பதால், துணைமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, தொல்லியல் எச்சங்களை பாதுகாக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, 738 நாட்களாக காத்திருப்பு போராட்டத்திலும், கடந்த, ஏழு நாட்களாக விவசாயிகள் சிலர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, பெருந்துறை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., உள்ளிட்டோர், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்துறை அமைச்சர் சிவசங்கரன் ஆகியோரை சந்தித்து பேசினர்.
'குமரிக்கல்பாளையத்தில் தொல்லியல் எச்சங்கள் நிறைந்த பகுதியை பாதுகாப்போம்' என, அமைச்சர்கள் உறுதியளித்தனர். அதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த காத்திருப்பு போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.